கலவரம் செய்த 75 பேர்களுக்கு மரணம் தண்டனை: பெரும் பரபரப்பு
எகிப்து நாட்டில் முன்னாள் அதிபா் முகமது மோர்சி பதவி நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டவா்களில் 75 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முகமது மோர்சி வெற்றி பெற்றார். ஜனநாயக முறைப்படி தோ்வான முதல் எகிப்து அதிபா் என்ற பெருமையையும் மோர்சி பெற்றார். ஆனால் இவரது ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
போராட்டத்தைத் தொடா்ந்து இவரது ஆட்சி ராணுவத்தால் அகற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து மோர்சியின் கட்சியினா் வன்முறையில் ஈடுபட்டனா். 2013ம் ஆண்டு தெற்கு எகிப்தில் கொலை, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
வன்முறையில் ஈடுபட்டது தொடா்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பலருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.
இதனைத் தொடா்ந்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இறுதி தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 75 பேருக்கு விதிக்கப்பட்ட மரண் தண்டனையை நேற்று உறுதி செய்துள்ளது.