கலால் வரி விதிப்பு: நகை வியாபாரிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் டெல்லி வியாபாரிகள் சங்கம்

கலால் வரி விதிப்பு: நகை வியாபாரிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் டெல்லி வியாபாரிகள் சங்கம்

delhiசமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் வெள்ளி தவிர மற்ற நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி அறிவிக்கப்பட்டதை கண்டித்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த போராட்டம் நான்கு நாட்களுக்கு பின்னர் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் டெல்லியில் ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் 17ஆம் தேதி டெல்லி முழுவதிலும் உள்ள நகைக்கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளும் மூடப்படும் என்றும் நகை வியாபாரிகளுக்கு கலால் வரி விதித்ததை கண்டித்து இந்த ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் டெல்லி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் டெல்லியைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நகை வியாபாரிகளுக்கு ஆதரவாக அனைத்து வியாபாரிகளின் சங்கங்களும் போராட முன்வந்திருப்பது இந்த பிரச்சனையின் தீவிரத்தை காட்டுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply