கலெக்டர் காரின் முன் குறுக்கே விழுந்த போதை ஆசாமி:
தமிழகம் முழுவதிலும் உள்ள கலெக்டர்கள் குறித்த பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் நிலையில் நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் டெங்கு குறித்த ஆய்வுக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென போதை ஆசாமி ஒருவர் அவருடைய காரின் குறுக்கே படுத்து போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் அந்த போதை மனிதர் முன்னதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் குறித்து புகார் கூறிக்கொண்டு இருந்தார். போதையுடன் உளறலுடன் கூறியதால் கலெக்டர் அவர் கூறியதை காதில் வாங்காமல் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போதை ஆசாமி திடீரென கலெக்டரின் கார் முன் படுத்து மறியல் செய்தார்
பின்னர் கலெக்டரின் பாதுகாவலர்கள் அந்த ஆசாமியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது