கலைஞர் அறிவாலயம்: சென்னையில் 2வது அலுவலகத்தை கட்ட ஸ்டாலின் திட்டம்
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயம் தற்போது திமுகவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மாநில அளவிலான கூட்டம் நடத்தும்போதெல்லாம் தேனாம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது
இதனை தவிர்க்க சென்னை புறநகரில் பிரமாண்டமாக ஒரு தலைமை அலுவலகத்தை கட்ட திமுக திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு கலைஞர் அறிவாலயம் என்ற பெயர் சூட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
கலைஞர் அறிவாலயத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கடம்பாரி மற்று பெருமாளேரி கிராமங்கள் இருக்கும் பகுதியில், சுமார் 12 ஏக்கர் நிலம் திமுக அறக்கட்டளை சார்பில் வாங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான பத்திரப்பதிவு சமீபத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டிடம் கட்டி முடித்தவுடன் மாநில அளவிலான கூட்டம் இங்கே நடத்தப்படும் என்று தெரிகிறது