கல்கண்டு வடை செய்வது எப்படி?
என்னென்ன தேவை
முழு உளுந்து – 400கிராம்.
பெரிய கல்கண்டு (பொடி பண்ணியது) – 400 கிராம்.
ஈர அரிசி திரித்த பச்சரிசி மாவு அல்லது மைதா மாவு – 400 கிராம்
எண்ணெய் – 1கிலோ.
எப்படிச் செய்வது
உளுந்தம் பருப்பை 2 மணி நேரம்வரை ஊற வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து தண்ணீர் நன்றாக வடிந்த பிறகு கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். மாவு அரைக்கும்போது பொடி செய்த கற்கண்டைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அரையுங்கள். மாவு பந்துபோல வந்தவுடன் எடுத்துவிடுங்கள். அதனுடன் பச்சரிசி மாவு அல்லது மைதா மாவு சேர்த்துப் பிசைந்து வாணலியில் எண்ணெய் விட்டுச் சிறிது சிறிதாக வடைகளாகத் தட்டுங்கள். அடுப்பு மிதமான சூட்டில் இருக்க வேண்டும். சூடு அதிகமாக இருந்தால் வடை கறுப்பாகி விடும்.