கல்பர்கி-கவுரிலங்கேஷ் கொலையில் ஒற்றுமை? திடுக்கிடும் தகவல்
சமீபத்தில் பெங்களூரில் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலைக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த கன்னட எழுத்தாளர் கல்பர்கி கொலைக்க்கும் சம்பந்தம் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
கல்பர்கியை கொலை செய்ய பயன்படுத்திய 7.65மிமீ அளவு கொண்ட அதே வகை துப்பாக்கிதான் கவுரி லங்கேஷ் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே கல்பர்கி கொலை செய்த நபரோ அல்லது அவரது குழுவினர்களோதான் கவுரி லங்கேஷையும் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும் கல்பர்கியை கொலை செய்தவர்களை இன்னும் கர்நாடக போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.