கல்லறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த பெல்ஜியம் மேயர்

கல்லறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த பெல்ஜியம் மேயர்

பெல்ஜியம் நாட்டின் மேயர்ல் அல்ஃபிரட் காடனே அவர்கள் அங்குள்ள ஒரு கல்லறையில் மர்மமான முறையில் பிணமாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

71 வயதான அல்ஃபிரட் காடனே அவர்கள் திடீரென காணாமல் போனதை அடுத்து அவருடைய மனைவி அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு கல்லறையில் அவர் பிணமாக இருந்ததும், அவர் படுபயங்கரமாக தாக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தனது கணவரின் நிலை குறித்து அந்த முதிய பெண் போலீசிடம் தெரிவிக்க போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மர்மமான முறையில் பெல்ஜியம் மேயர் மரணம் அடைந்தது குறித்து அவருடைய குடும்பத்தினர்களும், அந்த பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply