அமைச்சர் அன்பழகன்
கல்லூரி மாணவர்களுக்கு செப். 15-க்குப் பின் இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு செப்.15க்கு பிறகு நடைபெறும் என்றும்
இறுதி பருவத்தேர்வுக்கான விரிவான அட்டவணை, தேர்வு மையங்களில் விரைவில் விவரம் வெளியிடப்படும் என்றும், இறுதியாண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பிஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 7ந் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.