கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி, பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் இலவசம்: பாஜக அதிரடி அறிவிப்பு!

கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி, பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் இலவசம்: பாஜக அதிரடி அறிவிப்பு!

டெல்லியில் பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன

ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனைப் போட்டியாக இருப்பதால் இந்த முறை வெற்றி பெறுவது யார் என்பதை கணிக்க முடியாத அளவில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன்னர் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏற்கனவே ஆம் ஆத்மி தரப்பில் பெண்களுக்கு பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பள்ளி கல்லூரி மாணவிகளை கவர்வதற்காக திட்டங்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply