கள்ளக்காதலியை திருப்தி செய்ய ஊரையே கொளுத்திய வாலிபர்: திடுக்கிடும் தகவல்
கள்ளக்காதலியுடன் ஒரு நாள் இரவு முழுவதும் ஜாலியாக இருப்பதற்காக பெட்ரோல் குண்டு வீசி ஊரையே கொளுத்த முயன்ற வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
அய்யம்பாளையம் அழகர்பொட்டல் என்ற பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் திருமணமான பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலிடன் ஜாலியாக இருக்க முடிவு செய்த அவர் அவரது ஊருக்கு வந்தார். ஆனால் அவரது தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது
எனவே அந்தப் தெரு மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக பாட்டிலில் பெட்ரோல் வாங்கி அதை அருகில் உள்ள குடோன் ஒன்றில் வீசியுள்ளார் திடீரென குடோனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அறிந்த அந்த பகுதி மக்கள் உடனே அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
இந்த பரபரப்பில் தெருவில் உள்ளவர்கள் இருக்கும் போது இவர் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று இரவு முழுவதும் ஜாலியாக இருந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்தது தெரிய வந்தது. அதனை அடுத்து ராஜாங்கம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்தபோது கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருக்க ஊர் மக்களின் கவனத்தை திசைதிருப்ப பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிய வந்தது.