கள்ளக்காதல் தவறு கிடையாது – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
கள்ளக்காதல் என்றால் ஒரு சமூக குற்றம் என்ற அளவில் அனைவரும் கருதி வரும் நிலையில் கள்ளக்காதல் தவறு கிடையாது என்றும், திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை என்றும் தலைமை நீதிபதி அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஒரு பெண்ணின் கணவர் என்பவர் அவருக்கு எஜமானர் அல்ல என்றும் திருமண பந்தத்திற்கு அப்பாலான தகாத உறவு குற்றமில்லை என்றும் அது தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை என்றும் வழக்கு ஒன்றில் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.