கவின் வெளியேறியது சரியா? தியாகமா? பணத்தாசையா?

கவின் வெளியேறியது சரியா? தியாகமா? பணத்தாசையா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் இன்று வெளியேறுவாரா? மாட்டாரா? என சமூக வலைதளங்களில் ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டிருந்த நிலையில் உண்மையில் என்று கவின் வெளியேறிவிட்டார்

கவீன் இன்று வெளியேறுவது சரியா தவறா என்று ஒருபுறம் வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரைப் பொறுத்தமட்டில் இந்த முடிவு மிகச் சரியானது என்று அவர் முடிவு செய்துள்ளார்

5 லட்சம் பணம் என்பது அவருடைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் என்ற காரணத்தால் வெளியேறினாரா? அல்லது தர்ஷன் முகின் ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிகபட்ச வாய்ப்பு இருப்பதால் தன்னால் அவர்களுடைய வெற்றி பாதிக்கக்கூடாது என்று வெளியேறினாரா? என்பது அவருடைய உள்மனதில் மட்டுமே தெரியும்

கவின் எதற்காக வெளியேறினார் என்பதை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை இருப்பினும் அவர் வெளியேறியதன் காரணத்தை யூகிக்க முடிகிறது. தன்னுடைய நண்பர்கள் வெற்றி பெற நான் வெளியேறவும் தயார் என்று வாய்ப்பேச்சிற்காக அவர் சொல்லவில்லை என்பது இன்று உறுதியாகியுள்ளது

பணத்திற்காக வெளியேறினாரா அல்லது நட்புக்காக வெளியேறினாரா என்பது ஒருபுறம் வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் கண்டிப்பாக அவர் இன்று செய்தது ஒரு தியாகம் என்றும், பிக்பாஸ் இருக்கும்வரை அவரது பெயர் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் தெரிகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களில் இதுவரை யாரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியேறவில்லை அந்த வகையில் கவின் பெயர் அதிகநாள் பேசப்படும் என்பது மட்டும் உண்மை

Leave a Reply