காங்கிரஸ் கட்சியால் கூட்டணி இன்றி வெற்றி பெற முடியும்: கேஎஸ்அழகிரி
தமிழகத்தை பொருத்தவரை இதுவரை காங்கிரஸ் கட்சி அதிமுக, திமுகவுடன் மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரி, ‘கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சியால் தனித்து நிற்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளோம் என்றும், கூட்டணியின்றி வெற்றி பெற முடியாதா என்பதற்காகத்தான் இந்த கூட்டமே என்றும் தெரிவித்தார்.
மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்துமென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ்-திமுக கூட்டணியி விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது