காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகிய கமல் பட நாயகி
கமல்ஹாசனின் ‘இந்தியன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா மடோன்கர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் ஐந்தே மாதங்களில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மும்பை காங்கிரசில் நிலவும் உள்கட்சி அரசியலை எதிர்த்து போராட விரும்பாததால் ராஜினாமா செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை ஊர்மிளா கூறியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா, பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி என்பவரிடம் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.