காங்கிரஸ் கூட்டணியில் கமல்-ரஜினி

காங்கிரஸ் கூட்டணியில் கமல்-ரஜினி

நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் டெல்லி சென்றிருந்தபோது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் என்பது தெரிந்ததே. எனவே காங்கிரஸ் கட்சியுடன் அவரது கட்சி கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி ஆரம்பிக்கவுள்ள கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் ரஞ்சித்தை ராகுல்காந்தியிடம் தூது அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் கூறியபோது, ‘காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திப்பதற்காக இயக்குநர் ரஞ்சித்தை நடிகர் ரஜினிகாந்த் தூது அனுப்பி இருக்கலாம் என்று பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இவரது சந்தேகம் உறுதியானால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டண்யில் கமல், ரஜினி கட்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply