காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறால் கைமாறிய நாங்குநேரி
ஒரு தொகுதியின் எம்எல்ஏ அல்லது எம்பி எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட்டால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வருவது என்பது இயற்கையான ஒன்று
ஆனால் நாங்குநேரியை பொருத்தவரை காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு காரணமாக அங்கு இடைத்தேர்தல் வந்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த நிலையில் அவரே கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருக்கும்போது ஒரே நபருக்கு மீண்டும் வாய்ப்பு தருவது என்ற மிகப்பெரிய தவறின் காரணமாக நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது
தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதிமுக அந்த தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியுள்ளது
கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான வசந்தகுமாருக்கு பதிலாக வேறொரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைத்திருந்தால் தற்போது இந்த நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது