காங்கிரஸ் பிரமுகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி!
பெரியார் குறித்து ரஜினி பேசியதை மன்னார்குடி ஜீயர் கூறும்போது துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது எந்த தவறும் இல்லை என்றும் நல்லது யார் பேசினாலும் அவர்களை தாக்குவது அந்த அமைப்பினரின் வழக்கம் என்றும் கூறினார். மேலும் ராமரை செருப்பால் அடித்தது மற்றும் கடவுள்களை நிர்வாண படங்களை வைத்திருந்தது தவறு என்றும் பெரியார் ஒரு தர்மம் விரோதியாகத்தான் செயல்பட்டார் என்றும் இந்து மதத்தைப் பற்றி அவதூறாக பேசிய அவர்களுக்கு தைரியம் இருந்தால் பிறமொழி மற்றும் பிற மதத்தினரை பற்றி பேசுவார்களா? என்றும் தெரிவித்திருந்தார்
மன்னார்குடி ஜீயரின் இந்த கருத்துக்கு தனது டுவிட்டரில் கருத்து கூறிய காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் அவர்கள் கூறியதாவது: ஜீயர் ஒரு கருத்தை சொல்ல உரிமை உள்ளதென்றாலும், ஒரு சமூகத்தை/மதத் தலைவர்கள் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் போது மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும். ஆகவே மதத் தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்கள்/எண்ணப்படுபவர்கள் ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவர் உட்பட அரசியல்/சமூக தலையிடாமல் இருப்பது நலம்
அமெரிக்கை நாராயணன் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறிய பதில் இதுதான்: அரசியல்வாதிகள் பலர் மத நம்பிக்கைகளை தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி சமூக ஒற்றுமையை கலைக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்/ எண்ணப்படுபவர்கள் மதத்தினுள் தலையிடாமல் இருந்திருந்தால் யாரும் பேசவேண்டிய அவசியமே வந்திருக்காது.