காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி! பாஜகவுக்கு முதல் தோல்வியா?
குஜராத் மாநிலத்தில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பல்வீர்சிங்கை வெற்றி பெற வைக்க அக்கட்சி பல முயற்சிகளை செய்த நிலையிலும் காங்கிரஸ் வேட்பாளரும் சோனியாவின் நம்பிக்கைக்குரியவருமான அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளது பாஜகவுக்கு முதல் தோல்வியாக கருதப்படுகிறது
பா.ஜ.க.வின் அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர்களின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் 3வது உறுப்பினருக்கான இடத்தில் அகமது படேல் மற்றும் பல்வந்த் சிங் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் 44 வாக்குகள் பெற்று அகமது படேல் வெற்றி பெற்றுள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வெற்றி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து வாய்மையே வென்றுள்ளது என்று அகமது படேல் தனது டுவிட்டா் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தோல்வியடைந்த பல்வந்த் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.