காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…ஏன் தெரியுமா?

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…ஏன் தெரியுமா?

தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி அதனால் ஒருசில உயிரிழப்புகளும் இருந்து வருவதால் தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து டெங்குவை கட்டுப்படுத்தி வருகிறது.

குறிப்பாக சுகாதாரம் இல்லாமல் இருக்கும் தொழிற்சாலைகள், வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

அந்த வகையில் சுகாதார சீர்கேட்டுடன் இருந்ததாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். மேலும் இந்த அபராத தொகையை அரசு பணத்தில் இருந்து கட்டாமல், அந்த மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களிடம் வசூலித்து கட்ட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply