காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்பா? இதோ தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகள் குளங்களாக மாறியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மழையின் காரணமாக ஏற்படும் பேரிடர்களில் பாதிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பேரிடர் மேலாண்மைக் குழு, தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை அரசுக்கு தெரிவிக்க அம்மாவட்ட கலெக்டர் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளார். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய எண்கள் 044-27237107, 044-27237207, வாட்ஸ்அப் எண்கள் 9445051077, 9445071077, கோட்ட அளவிலான தொடர்பு எண்கள் காஞ்சிபுரம்-94451664756, 9790930878, தாம்பரம்-9962228549, மதுராந்தகம்-9444480048 ஆகிய எண்களில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மழை பாதிப்பு குறித்து தொடர்புகொள்ளலாம்’ என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்