காட்சிகள் நீக்கப்பட்டது, எதிர்ப்புகளை கைவிடுங்கள்: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் அதிமுகவினர் சுட்டிக்காட்டிய காட்சிகள் மியூட் செய்யப்பட்டும், நீக்கபட்டும் மறுதணிக்கை செய்யப்பட்டுவிட்டதால் அதிமுகவினர் எதிர்ப்புகளை கைவிட வேம்டி, என ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்களை திரையுலகினர் யார் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்ற நிலை உள்ளது சிறப்பு என்றும் தமிழக அரசுக்கு ஆர்.கே.செல்வமணி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அரசியல் ரீதியாக படம் எடுப்பவர்கள், திரைப்படங்களில் தனிமனித தாக்குதல்களோ, காழ்ப்புணர்ச்சி கருத்துக்களோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்.