காணும் பொங்கல்: மெரீனாவில் குவிந்த 6 டன் குப்பைகள்
நேற்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக சென்னை மெரீனாவில் சுமார் ஒரு லட்சம் பேர் நேற்று கூடியதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை மெரீனாவில் 6 டன் குப்பைகள் குவிந்ததாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் குடிதண்ணீர் பாட்டில், உணவுக் கழிவுகள் அதிகம் இருந்ததாகவும், கலங்கரை விளக்கம் முதல் அண்ணாசதுக்கம் வரையில் நேற்றிரவு முதல் சுமார் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குப்பையை அகற்றியதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியில் 7 நவீன ரக குப்பை அள்ளும் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்காலிக தடுப்பு வேலிகள், உயர் கண்காணிப்பு கோபுரங்களும் அகற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்