காதலனின் தந்தையை கொலை செய்த காதலியின் தந்தை: கரூரில் பரபரப்பு

காதலனின் தந்தையை கொலை செய்த காதலியின் தந்தை: கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே ஒரு இளைஞர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் காதலன் தனது காதலிக்கு புத்தம் புதிய ஒரு மொபைலை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த விஷயம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிந்துவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த் அவர் தனது மகளுக்கு மொபைல் வாங்கி கொடுத்த காதலன் மேல் உள்ள கோபத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றார்.

ஆனால் வீட்டில் காதலனின் தந்தை மட்டுமே இருந்தார். அவரிடம் பெண்ணின் தந்தை தகராறு செய்தார். இந்த தகராறு ஒருகட்டத்தில் முற்றில் காதலனின் தந்தையை பெண்ணின் தந்தை கொலை செய்துவிட்டு பின்னர் தலைமறைவானார். தற்போது கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply