காதல் ஜோடிகளுக்கு கோமியம் கொடுக்கும் தண்டனை: உபியில் பரபரப்பு

காதல் ஜோடிகளுக்கு கோமியம் கொடுக்கும் தண்டனை: உபியில் பரபரப்பு

கலப்புச் சாதியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்றுக்கு கோமியம் கொடுக்கும் தண்டனையை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து இயக்கம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உபி மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூபேஷ்-ஆஷா ஆகிய காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியினர் என்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து இயக்கம் இந்த தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து அவர்களிடம் யாரும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டனர்

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாயத்து கூடியபோது தங்களை மீண்டும் ஊரில் சேர்த்துக் கொள்ளுமாறு பூபேஷ்-ஆஷா தம்பதியினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்து இயக்கம் இரண்டு நிபந்தனைகளை விதித்தது. ஒன்று பூபேஷ்-ஆஷா தம்பதியினர் கோமியத்தை குடிக்க வேண்டும் என்றும் இரண்டாவது பஞ்சாயத்துக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் கூறியது

இதனால் அதிர்ச்சி அடைந்த காதல்ஜோடி இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply