காந்தி சிலைக்கும் காவி நிறமா? உபி அரசு அதிருப்தியில் பொதுமக்கள்

காந்தி சிலைக்கும் காவி நிறமா? உபி அரசு அதிருப்தியில் பொதுமக்கள்

உபி மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அனைத்தும் காவி நிறமாக மாறி வரும் நிலையில் காந்தி சிலைக்கும் காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் சஹஜஹான்பூர் மாவட்டத்தின் பண்டா தேசில் பகுதியில் உள்ள தாகா கன்ஷியாம்பூர் கிராமத்தில் தொடக்க பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் காந்தி சிலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதையடுத்து, அந்த சிலைக்கு புது வண்ணம் அடிக்க வேண்டும் என முடிவானது. அதன்படி, காந்தி சிலைக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, உள்ளூர் காங்கிரசார் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

Leave a Reply