காந்தி பிறந்த நாளில் அஸ்தி திருட்டு: கமல்ஹாசனின் கண்டிப்பு கவிதை

காந்தி பிறந்த நாளில் அஸ்தி திருட்டு: கமல்ஹாசனின் கண்டிப்பு கவிதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான நேற்று முன் தினம், மத்திய பிரதேசத்தில் அவருடைய அஸ்தியை சிலர் திருடி சென்றதோடு, அவருடைய சிலை அருகே தேசத்துரோகி’ என எழுதியும் வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நாடு முழுவதிலும் உள்ள பலர் கண்டித்துள்ள நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய பாணியில் கண்டித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே

இந்த டுவீட் புரியாதவர்களுக்கு ஒரு விளக்கம்: காந்தியின் அஸ்தியை திருடிய பக்தாள்களே அந்த அஸ்தி நீங்கள் திருந்திய பின்னர் உங்கள் நெற்றியில் பூசிடத்தான் வைக்கப்பட்டு இருந்தது. அப்படியான அஸ்தியை களவுற்று.. திருநீரென நீங்கள் நெற்றியில் வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னமும்… அந்த அஸ்தி இருக்கிறது.

ஆனால் நீங்கள் காந்தியைப்போல இன்னும் பிறரையும் கொன்றதால் பிணக்குவியல் கூடிக்கொண்டே செல்கிறது. அப்படி கூடிக்கொண்டே செல்லும் போது உங்களது பக்தியின் அஸ்திவாரம் மரணித்து… காந்தியின் அஸ்தி எனும் சாம்பலோடு மேலோகம் செல்லட்டும் என கணக்கில் அடங்காத இந்தியர்கள் நினைக்கின்றோம்… அதற்காக வாழ்த்துக்களையும் சொல்கின்றோம்.

இதுதான் இந்த டுவீட்டின் அர்த்தம். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் ’காந்தியின் சாம்பலை திருடியதை கண்டிக்கிறேன்’ என்பதுதான் இதன் அர்த்தம்

Leave a Reply