குஜராத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் காந்தி வேடமிட்டு கொரோனா டெஸ்ட் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா பரிசோதனை செய்வதற்கு மக்கள் தயங்கி வருவதாகவும் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே காந்தி வேடமிட்டு கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அந்த சிறுவன் பேட்டியில் கூறியுள்ளார்
கொரோனா பரிசோதனையில்அந்த சிறுவனுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனை அடுத்து மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மக்களுக்கு கொரோனா பரிசோதனை குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக காந்தி வேடமிட்டு பரிசோதனை செய்த அந்த சிறுவனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது