’காப்பான்’ படத்தை ஓட வைக்க திமுகவை வம்புக்கு இழுக்கின்றதா படக்குழு?
கோலிவுட் திரையுலகில் தற்போது ஒரு பெரிய ஸ்டாரின் படம் ஓட வேண்டும் என்றால் அந்த படத்தில் ஒரு பெரிய அரசியல் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இருக்க வேண்டும் என்ற ஃபார்முலா உருவாகிவிட்டது
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது டுவிட்டரில் ஒருசிலர் திமுகவை வம்புக்கு இழுக்கும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்து படத்திர்கு புரமோஷன் செய்து வருகின்றனர்.
காப்பான்’ படத்தில் தாத்தா, மகன், பேரன் என பதவிக்கு வர இது என்ன சித்த வைத்திய சாலையா? என்ற வசனத்தை குறிப்பிட்டு திமுகவை சீண்டி வருகின்றனர். இதற்கு திமுக பிரமுகர்கள் பதிலடி கொடுத்தால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்ற நினைப்பில் படக்குழுவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெய்டு டுவிட்டர்கள் இதுமாதிரியான டுவீட்டுக்களை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது