காமெடி நடிகர் போண்டாமணிக்கு கொரானா வைரஸ் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் இந்தியாவையும் தாக்கி விட்டதாகவும் தமிழகத்திலும் நுழைந்து விட்டதாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் பிரபல தமிழ் காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது ஆனால் இந்த செய்திக்கு போண்டாமணி மறுப்பு தெரிவித்துள்ளார்
தனக்கு கொரானா பாதிப்பு இல்லை என்றும் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்