காரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதல்வர்: வைரலாகும் வீடியோ

காரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதல்வர்: வைரலாகும் வீடியோ

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி வைக்க காரில் சென்று கொண்டிருந்தபோது சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது

சேலத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள கிரிக்கெட் மைதானத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ராகுல் டிராவிட் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த விழாவிற்கு காரில் முதல்வர் சென்று கொண்டிருந்த போது வழியில் சிறுவர்கள் அவரை நோக்கி மகிழ்ச்சியுடன் கை காட்டி வரவேற்றனர். இதனை பார்த்த முதல்வர் உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி அந்த சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு சாக்லேட் வழங்கினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்தான் மக்களின் முதல்வர் என அந்த பகுதியில் உள்ளவர்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply