கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அப்ரூவராக மாறும் இந்திராணி முகர்ஜி!

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அப்ரூவராக மாறும் இந்திராணி முகர்ஜி!


ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில் ஐ .என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறவுள்ளதாகவும், அதற்கு சி.பி.ஐ சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் மே 23ஆம் தேதி ஆஜராகும் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவார் என்று கூறப்படுகிறது

Leave a Reply