கார்ப்பரேட் வரி: 2-வது இடத்தில் இந்தியா

கார்ப்பரேட் வரி: 2-வது இடத்தில் இந்தியா

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில்தான் கார்ப்பரேட் வரி அதிகமாக விதிக்கப்படுகிறது. செஸ், சர்சார்ஜ் உள்ளிட்டவை சேர்த்து இந்தியாவில் கார்ப்பரேட் வரி 34.61 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவில் கார்ப்பரேட் வரி 40 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கார்ப்பரேட் வரி அரசின் பிரதான வருமானங்களில் ஒன்று. குறைவான வரி இருந்தால் தொழில் புரிய எளிதாக இருக்கும் என்று நிறுவனங்கள் கூறிவருகின்றன. ஏற்கெனவே நிதியமைச்சர் அருண் ஜேட்லி கார்ப்பரேட் வரி நான்கு வருடத்தில் 34 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் வரி வரம்பு குறைக்கப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. உலக நாடுகளில் கார்ப்பரேட் வரி எவ்வளவு விதிகப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

சர்வதேச நாடுகளில் கார்ப்பரேட் வரி (சதவீதத்தில்)

அமெரிக்கா – 40

இந்தியா – 34.61

பிரேசில் – 34

பிரான்ஸ் – 33.33

ஜப்பான் – 30.86

பிலிப்பைன்ஸ் – 30

ஜெர்மனி – 29.72

தென் ஆப்பிரிக்கா – 28

சீனா – 25

ரஷ்யா – 20

Leave a Reply