காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்ட 7 பசுமாடுகள் பலி: அதிர்ச்சி தகவல்
விழுப்புரம் அருகே முந்திரிக்காட்டில் கொட்டப்பட்டிருந்த காலாவதியான நூடுல்ஸ்களை சாப்பிட்ட 7 பசு மாடுகள் பலியாகியிருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் அருகே முந்திரிக் காட்டில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் திடீர் திடீரென செத்து விழுந்த சம்பவம் அந்த பகுதியினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பசுமாடுகள் பலியாக என்ன காரணம் என அந்த பகுதியில் உள்ளவர்கள் முந்திரி காட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக காலாவதியான நூடுல்ஸ் கொட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த நூடுல்ஸ் மழையில் நனைந்து இருந்த நிலையில் அதனை சாப்பிட்ட பசுமாடுகள் பலியாகி இருப்பது தெரியவந்தது
இதனையடுத்து உடனடியாக அந்த நூடுல்ஸ்களை அந்த பகுதியினர் அப்புறப்படுத்தினர். காலாவதியான நூடுல்ஸ்களை வியாபார்கள் தீயிட்டு அழிக்காமல் இவ்வாறு கொட்டுவதால் கால்நடைகள் பரிதாபமாக பலியாகி வருவதாகவும், இந்தத் தவறு இனிமேல் நடைபெறாமல் இருக்க வியாபாரிகள் காலாவதியான நூடுல்ஸ்களை தீயிட்டு அழிக்க வேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.