காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: தமிழக தேர்தல் அதிகாரி

காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: தமிழக தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் தற்போது காலியாக 21 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் இந்த தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டாலும் அதற்கு தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

100 சதவீத வாக்காளர் அட்டை வழங்கி உள்ளோம். புதிய வாக்காளர் அட்டை பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply