காலை வாரிய விநியோகிஸ்தர்: விட்டுக்கொடுத்த சங்கத்தமிழன் தயாரிப்பாளர்!

காலை வாரிய விநியோகிஸ்தர்: விட்டுக்கொடுத்த சங்கத்தமிழன் தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நேற்று காலை ஒருசில காரணத்தால் ரிலீசாகவில்லை என்பதும் இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனை தற்போது தெரிய வந்தூள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லிப்ரா புரடொக்சன்ஸ் என்ற பெரிய நிறுவனம் ரூபாய் 8 கோடிக்கு தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. இதற்காக ரூபாய் மூன்று கோடி மட்டும் அட்வான்ஸ் பணமும் கொடுத்துள்ளதாக தெரிகிறது

ஆனால் ரிலீஸ் தேதிக்கு முந்தைய நாள் மீதமுள்ள ரூ.5 கோடியை செட்டில் செய்யாமல் ரூபாய் 2 கோடி மட்டுமே தன்னிடம் இருப்பதாக கூறியதால் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஒரு நல்ல படத்தை ரிலீஸ் செய்யாமல் முடக்க மனமில்லாத விஜயா புரடொக்சன்ஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை ரிலீசுக்கு பின்னர் வாங்கிக்கொள்வதாக சம்மதித்து ரிலீஸ் செய்ய அனுமதி அளித்தது.

கோலிவுட்டி இதுபோன்று நடப்பது இது முதல்முறையல்ல. ஆனாலும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக சில கோடிகளை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ரிஸ்க் எடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply