கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

medicalகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வியாழக்கிழமை வரை 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கு மே 20-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்தப் படிப்புக்கு இதுவரை 15,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஜூன் 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதற்கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 17-ஆம் தேதி கடைசியாகும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply