கால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை
ரிலே போட்டி ஒன்றில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் நிலைகுலைந்து போனார். இருப்பினும் மன உறுதியுடன் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில், தவழ்ந்தவாறே சென்று சக வீராங்கனையிடம் ரிப்பனை கொடுத்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற ரிலே போட்டியில் ரெய் லிடா என்ற வீராங்கனை தனது சக வீராங்கனைகளுடன் பங்கேற்றார். போட்டி தொடங்கியதும் சிறிது தூரத்தையே கடந்த அவர் திடீரென கீழே விழுந்தார். இதனால் லிடாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவரால் எழுந்து ஓட முடியாத நிலையிலும் வலியுடன் தவழ்ந்தவாறே இலக்கை நோக்கி நகர்ந்து அங்கு தயாராக காத்திருந்த சக வீராங்கனையிடம் ரிப்பனை கொடுத்தார். 200 மீட்டர் தூரம் வரை தவழ்ந்து சென்றதால் லிடாவின் முழங்கால்களில் இரத்தம் வடிந்தது. இதன் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லிடாவின் விடா முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=rU4fzo1CwlI