மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பீட்டர்பால் முதல் மனைவி
சமீபத்தில் நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணமும் சர்ச்சையாகி இந்தத் திருமணத்திற்கு முதல் மனைவி எலிசபெத் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் பார்த்தோம்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு நாட்களுக்கு முன்னரே பீட்டர்பால் வனிதா திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் ஆனால் அந்த புகாரை வாங்கிய காவல் ஆய்வாளர் சரியான நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த திருமணம் நடந்ததாகவும் பீட்டரின் முதல் மனைவி மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்
இதனை அடுத்து காவல் ஆய்வாளரை நீக்கிவிட்டு வேறு புதிய அதிகாரியை நியமித்து பீட்டர்பால் திருமணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது