காவல் துறையினர் எனது வீட்டின் கதவை தட்டினர்: ஏ.ஆர்.முருகதாஸ் பரபரப்பு டுவீட்

காவல் துறையினர் எனது வீட்டின் கதவை தட்டினர்: ஏ.ஆர்.முருகதாஸ் பரபரப்பு டுவீட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என நேற்று அதிமுகவினர் தியேட்டர்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்றிரவு ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுவார் என்ற வதந்தை பரவியது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடு அருகில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தாங்கள் வரவில்லை என்றும், அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவே வந்ததாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில், ‘ காவல் துறையினர் எனது வீட்டின் கதவை பலமுறை தட்டினர். நான் தற்போது வீட்டில் இல்லை. தற்போது எந்த காவலரும் எனது வீட்டின் முன்பு இல்லை என பதிவு செய்துள்ளார்.

 

 

Leave a Reply