காவிரியில் இருந்து மீண்டும் நீரை திறந்துவிட்ட கர்நாடகம்! காரணம் என்ன?
கடந்த சில நாட்களுக்கு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கபிணி அணை மிக வேகமாக நிறைந்தது. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் சமீபத்தில் தமிழகத்தை வந்து சேர்ந்தது
இந்த நிலையில் தற்போது மீண்டும் கபிணி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் அணைகள் நிரம்புவதால் காவிரியில் நீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதாகவும், கபினி அணையில் இருந்து ஏற்கனவே 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் நிலையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.