காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அ.தி.மு.க. எம்.பி ஆவேசம்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தாமதப்படுத்தலாம் என்று பேசப்பட்டது. ஆனால், தேர்தலுக்கும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கும் தொடர்பு இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் தெளிவுபடுத்திவிட்டார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் என அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாக பேசினார்.
இதுதொடர்பாக, பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று பேசிய அ.தி.மு.க. எம்.பி நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம் பிக்கள் தற்கொலை செய்வோம். உச்ச நீதிமன்றத்தின் திர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றால் அரசியல் சாசனம் எதற்கு? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என தமிழகத்தில் கோரிக்கை விடுக்கிறார்கள் என ஆவேசமாக பேசினார்.