காவி நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு மாறிய இந்திய அணி
வங்கதேச அணிக்கு எதிரான இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் நீல நிற ஜெர்ஸிக்கு மாறியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி மறுபடியும் நீல நிற ஜெர்ஸியுடன் களமிறங்கியுள்ளது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
காவி நிற ஜெர்ஸியில் விளையாடிய இந்திய அணி கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு காவி நிற ஜெர்ஸியும் ஒரு காரணம் என ஒருசிலரால் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது