காவேரி மருத்துவமனையில் 10வது நாள்: கருணாநிதியின் உடல்நிலை எப்படி?
சென்னை காவேரி மருத்துவமனையில் 10 வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது தற்போதைய உடல்நிலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 28- ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தானாக சுவாசித்து வருகிறார். உடல் நிலை சீராகி வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதே நேரத்தில் இன்று கருணாநிதியின் உறவினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளதால் அவரது உடல்நிலையில் பின்னடைவு என வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுகவினர் கூறிவருகின்றனர்.