காஷ்மீர்: சர்வதேச பிரச்சனையாக்க முயன்ற பாகிஸ்தான் முயற்சி தோல்வி
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் ஜம்முகாஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இரு நாடுகளும் புகார் அளித்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க முடியாது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துவிட்டது. எனவே காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க எண்ணிய, இந்தியாவிற்கு எதிரான பாக்-சீனா வின்
முயற்சி ஐ.நா சபையில் தோல்வியடைந்தது!