காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்

சிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கிளப்புக்கு சொந்தமான இடங்களில் உலகின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாதனை படைத்த பிரபல கிரிக்கெட் வீரர்களின் அலங்கார உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் பிரதமருமான இம்ரான்கானின் படமும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்திய கிரிக்கெட் கிளப்புக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள இம்ரான்கானின் உருவப்படத்தை இந்திய கிரிக்கெட் கிளப் மூடி மறைத்துள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கிளப்பின் தலைவர் பிரமல் உதானி உறுதி செய்துள்ளார்.

விரைவில் இம்ரான்கான் படத்தை நிரந்தரமாக அங்கிருந்து எடுப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதலால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் அதிருப்தியையும் பாகிஸ்தான் சந்திக்க நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply