காஷ்மீர் விவகாரம்: நாட்டு மக்களுக்கு பிரதமரின் உரை
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தான 370ஆவது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட உள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இது குறித்து விளக்கமளித்து உரையாற்ற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுவதால் பிரதமரின் இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது