கிம் ஜோங் உன்-ட்ரம்ப் சந்திப்பு திடீர் ரத்து! மீண்டும் பதட்ட நிலை

கிம் ஜோங் உன்-ட்ரம்ப் சந்திப்பு திடீர் ரத்து! மீண்டும் பதட்ட நிலை

சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கின் ஜோங் உன் ஆகியோர் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.

இந்த சந்திப்பை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம், வடகொரிய அதிபருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

டிரம்ப் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கடிதத்தில், “நீங்கள் அணு ஆயுதத் திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடைய அணு ஆயுதங்கள் மிகப்பெரியது, சக்தி வாய்ந்தது அதனை நாங்கள் ஒரு போதும் பயன்படுத்தாதிருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் எழுதிய கடிதத்தில் “உங்களுடைய சமீபத்திய அறிக்கை ஒன்று பெரிய அளவு பகைமையும் கோபாவேசமும் நிறைந்ததாக இருந்ததால், நீண்ட நாளைய திட்டமான நம் சந்திப்பை இப்போது நடத்துவது சரியாகாது என்று நான் கருதுகிறேன், இதற்காக நான் வருந்துகிறேன்” என்று எழுதியுள்ளார், இது இழந்த வாய்ப்புதான் ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் கிம்-ஐ தான் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

Leave a Reply