கிரிக்கெட் போட்டியின் நடுவராக மாறிய ஆபாச நடிகர்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடுவராக இருந்த ஒருவர் முன்னாள் ஆபாச நடிகர் என்று தெரியவந்தது
இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் 51 வயதான கார்ட் ஸ்டிராட் என்பவர் நடுவராக செயல்பட்டார்.
இவர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது தெரிய வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்தில் தொழில்முறை கோல்ப் சங்கத்தில் தலைமை நிர்வாகியாக இருந்து இவர் அந்த பதவியில் இருந்து கொண்டே ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். இதனையடுத்து அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் பின்னர் மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயல்பட்டு தற்போது ஆண்கள் கிரிக்கெட் போட்டியிலும் நடுவராக உள்ளார்.