இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.100க்கு விற்கப்பட்ட சாமந்திப்பூ தற்பொழுது ஒரு கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது.
அதேபோல 600 ரூபாய்க்கு விற்கபட்ட மல்லி பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது. பன்னீர் ரோஜா மற்றும் இதர ரோஜா பூக்கள் 120 முதல் 140 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
மலர்களைப் போன்றே பழங்களின் விளையும் அதிகரித்துள்ளது. ஆப்பிள் கொய்யா மற்றும் மாதுளை பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 120 முதல் 150 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. அதேபோல கொய்யாப்பழம் பழங்களின் தரத்திற்கு ஏற்ப 25ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் அடுத்தடுத்த நாட்களில் முகூர்த்த தினங்கள் வருவதால் இன்னும் ஒரு வார காலத்திற்கு மலர்களின் விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.