கிறிஸ்துவ பெண்ணை தூக்கில் போட பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை.
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மதவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிறிஸ்துவ மத பெண் 44வது ஆசியா பீபி. இவருக்கு இவருடைய பக்கத்துவீட்டு முஸ்லீம் பெண்ணுக்கு தனிப்பட்ட பிரச்சனை ஒன்று நடந்துள்ளது. இதனால் இஸ்லாமிய மதத்தை அவதூறாக பேசியதாக அந்த இஸ்லாமிய பெண் காவல்துறையில் புகார் கொடுத்ததால், ஆசியா பீபீ கைது செய்யப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் ஆசியா பீபீ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக என் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தி விட்டனர். எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என கூறி அந்த பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்
இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசியா பீபியின் சார்பில் ஆஜரான வக்கீல் சயீப் உல் மலூக், “என் கட்சிக்காரர் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது, அவர் அப்பாவி, அவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து ஆசியா பீபியை தூக்கில் போட அதிரடி தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு அது உத்தரவிட்டது.